கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள், ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம். இதை அங்குள்ள சிசிடிவி கேமரா மூலமாக வைரல் ஆகி வருகிறது. தற்போது நள்ளிரவில் உலா வந்த ஒற்றைக்காட்டு யானையை அங்கு இரவு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் கண்டு பீதி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. எனவே வளாகத்திற்குள் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தினால் யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வளாகத்திற்கு உள்ளே நடமாடி வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள சுகாதார நிலைய வளாகத்திற்கு தடுப்பு சுவர் கட்டித் தர வேண்டும் என நோயாளிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Be First to Comment