கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அணைகளை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வால்பாறையிலுள்ள கீழ் நீராறு அணை, மேல்நீராறு அணைகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதிக்கு சென்று அங்கு மின் உற்பத்தி செய்யப்படும் இயந்திரங்களையும் நீர் வரத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய உயரமுள்ள சோலையாறு அணையை பார்வையிட்ட பின் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நீர்வழிப்பாதைகளின் அடிப்படையில் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றினால் கோடைகாலம் மற்றும் மழை குறைவாக பெய்யும் காலங்களில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோவை திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் பொள்ளாச்சி விவசாயிகள் விவசாயம் செய்ய போதுமானதாக இருக்கும்.

ஆனால் கடைமடை பகுதிகளான வெள்ளக்கோயில் காங்கேயம் பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவிவருவதால் கேரளா அரசு இடைமலையாறு அணை கட்டினால் ஆனைமலையாறு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திற்கு நீர் அதிகம் பெறுவதற்கு, ஏற்கனவே உள்ள சட்டரீதியான ஒப்பந்தத்தின் அடிப்படையின் மூலம் விரைவில் தமிழக முதல்வர் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் பருவமழை காலங்களில் கிடைக்கும் தண்ணீர் அணைகள் நிரம்பியதும் அதன் உபரி நீர் கேரள மாநிலத்திற்கு திறந்து விடப்பட்டு யாருக்கும் உபயோகம் இல்லாமல் கடலில் வீணாக கலப்பதை தடுத்து விடலாம். அதற்காகத்தான் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை மற்றும் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.
Be First to Comment