கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த காமராஜர் நகர் அருகில் சவரங்காடு தேயிலைத் தோட்ட பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதை கண்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது பட்டப் பகலில் இரண்டு சிறுத்தைகள் நடமாடி வருகிறது.

இது தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே உடனடியாக வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இரவு நேரங்களில் நாய், கோழி, ஆடு உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட அடிக்கடி குடியிருப்பு பகுதியில் நுழைகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
Be First to Comment