கோவை மாவட்டம் வையம்பாளையத்தில்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்தார். அப்போது உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிக்கு மணிமண்டபம் கட்டியதுடன் அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததும் இந்த அரசு என தெரிவித்தார். நேற்றைய தினம் இன்ப அதிர்ச்சியாக,
விவசாயிகள் சிரமத்தில் இருப்பதை அறிந்து முதல்வர் சட்டமன்றத்தில் 12,500 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ததை நாங்களே எதிர்ப்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக கூறினார். ஒரு தலைவர் அறைக்குள் இருந்துக்கொண்டு வீர வசனம் பேசி வரும் நிலையில், நேரடியாக மக்களை சந்தித்து கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றியது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார். இந்த நிகழ்வு அரசு விழாவாக முதன்முதலாக இன்று கொண்டாடப்படுவது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
வாழுகின்ற காமராஜர் என்று சொல்லக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாராயணசாமி நாயுடுவின் திட்டங்களை நிறைவேற்றுவார்
எனவும் 70 ஆண்டுகால பிரச்னையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் 2ஆம் கட்டத்தில் சேர்க்கப்படும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் இன்று மாலை முதல்வரை சந்திப்பது, மாலை நடக்கும் கட்சி கூட்டம் போன்றவை குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்காமல் தவிர்த்து விட்டார் .
Be First to Comment