விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட மாணவரணி சார்பாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை மாணவரணியினர் செய்து வருகின்றனர்.இந்நிலையில் வரும் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னதாக பல்வேறு நலத்திட்டம் மற்றும் சமூக பணிகளை செய்ய துவங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்க சிங்கை நகர மாணவரணி சார்பாக அதன் தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் இரத்ததானம் செய்யும் சமூக பணி நடைபெற்றது.மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சுதந்திரம் மீட்டர் ஆட்டோ தொழிற்சங்க மாநில பொருளாளர் சேவியர்,துணை தலைவர் விஸ்வாசம் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் பத்மநாபன், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து அனைவரும் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சாந்தி சோஷியல் சர்வீஸ் மையத்தில் உள்ள இரத்த தான சென்டரில் இரத்ததானம் செய்தனர். இது குறித்து மாவட்ட மாணவரணி தலைவர் பாபு கூறுகையில்,கொரோனா காலம் என்பதால் தடுப்பூசி போட இருப்பதால்,முன் கூட்டியே இரத்த தானம் செய்ததாக தெரிவித்தார்.இதில் மாவட்ட நிர்வாகிகள் இணைச் செயலாளர் செல்வம் செந்தில் சதீஷ்குமார் உக்கடம் பகுதி விஷ்ணு மற்றும் இங்கே நகர நிர்வாகிகள் தமிழ், சதீஷ், ரஞ்சித், ஸ்ரீதர், கருப்புசாமி, பிரபு, ராஜ்குமார், சிவராஜ், பாலகிருஷ்ணன், கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment