விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு நகர இளைஞரணி சார்பாக 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை கோவை தெற்கு நகர இளைஞரணியினர் சுகுணாபுரம் மாநகராட்சி பள்ளியில் கொண்டாடினர். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியை தேசிய கொடியேற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு நகர இளைஞரணி தலைவர் பைசல் தலைமை தாங்கினார். பொருளாளர் அக்கீம், செயலாளர் முகம்மது அலி, பீளமேடு விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்தியன் வுட்ஸ் அருட்செல்வர் குப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கேக் வெட்டி, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். கவுரவ அழைப்பாளர்களாக விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட இளைஞரணி தலைவர் யுவராஜ் மற்றும் மாநகர தலைவர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவ,மாணவிகளின் பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தெற்கு நகர இளைஞரணி நிர்வாகிகள் சிவபாலன், மெர்சல் செந்தில் சந்தோஷ் , குமார், கார்த்திக், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment