தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும், விஜய் மக்கள் இயக்கம் குறிச்சி நகர இளைஞரணியினர் கொண்டாடினர்.
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று தமிழக அரசியல் களத்தில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரையின் படி கொண்டாடி வருகின்றனர். அதன் படி கோவை சுகுணாபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்க குறிச்சி நகர இளைஞரணி சார்பாக இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
குறிச்சி நகர இளைஞரணி தலைவர் பைசல் தலைமையில் நடைபெற்ற இதில்,தன்னார்வலர் இந்தியன் வுட்ஸ் குப்புராஜ், ,குறிச்சி நகர இளைஞரணி நிர்வாகிகள் இரும்பு கடை அக்கீம்,முகம்மது அலி,சிவபாலன்,ஆஷிக்,கார்த்திக் மற்றும் மகளிரணியினர் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment