Press "Enter" to skip to content

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்,மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் 75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தெலுங்குபாளையம் புதூர் விஜய் மக்கள் இயக்க மாணவரணி சார்பாக தி.ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நாராயணசாமி திடல் பகுதியில் நடைபெற்றது.விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற இதில்,தெலுங்குபாளையம் பகுதி நிர்வாகிகள் தளபதி அஜித்,சபரீஷ்,சச்சின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் செல்வபுரம்,தெலுங்குபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.தொடர்ந்து தளபதி விஜய் வரும் 25 ஆம் தேதி அவரது திருமண நாளை கொண்டாடுவதை , முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனரின் குடும்பத்திற்கு மகப்பேறு உதவி தொகை வழங்கப்பட்டது.
இதில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் தேன் குமார்,நயீம்,மாரிராஜ்,சதீஷ் குமார்,செல்வம்,செந்தில்,மற்றும் சுதந்திர மீட்டர் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் சேவியர்,கணேசன்,பத்மநாபன்,எஸ்.எஸ்.கணேசன் மற்றும் உறுப்பினர்கள், தெலுங்குபாளையம் பகுதி மாணவரணி நிர்வாகிகள் ராகுல், ஐயப்பன், ஜெயப்பிரகாஷ், ரஞ்சித், சஞ்சய், தமிழ் சூர்யா தினேஷ், அருண், கார்த்திக், பிரவீன், மைத்ரேயன், யோகேஷ், சாய் ஹரி, கிஷோர், ராகுல், சூர்யா,மேற்கு நகர மாணவரணி விவேக்,சுபாஷ்,சங்கீத்,அபிஷேக்,குமரேசன்,சூர்யா,விக்கி,சூர்யபிரகாஷ்,மகேஷ் சந்தோஷ்,ஜெயராம்,சரண்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks