தமிழகம் முழுவதும் வடமேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில்,சென்னை,மதுரை,திருச்சி, கடலூர்,என தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிப்பு அறிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் முந்தைய தினமே அறிவிப்புகள் வெளியிட்டு வரும் நிலையில் கோவையில் காலை 8.15 மணிக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு வெளியானது.
நகரின் பல தூர கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்து வரும் மாணவர்கள் அதி காலை எழுந்து பள்ளிகளுக்கு வந்த பிறகு அறிவித்த விடுமுறை அறிவிப்பால் மாணவ,மாணவிகள் மட்டுமின்றி பெற் றோர்களும் அலை கழிக்கப்பட்டனர்.
விடுமுறை அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு மட்டுமே உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment