Press "Enter" to skip to content

விநாயகர் விசர்ஜன ஊர்வலம் கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகரில் மாநகரில் நாளை மறுநாள் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை
விநாயகர சிலை விசர்ஜன ஊர்வலமானது மதியம் 1 மணிக்கு குனியமுத்துார் தர்மராஜா
கோயிலிருந்து புறப்பட்டு குனியமுத்தூர், பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர்
குளத்தில் கரைக்கப்படுவதாலும், 14.00 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்று கூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுவதை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

1.கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் : விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு 02.09.2022 அன்று காலை
08.00 மணி முதல் இரவு 20.00 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது.

2.பாலக்காடு முதல் உக்கடம் வரும் வாகனங்கள் :
காலை 11.00 மணி முதல் பாலக்காடு ரோட்டிலிருந்து உக்கடம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கோவைப்புதுார் – குளத்துபாளையம் – ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு – புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் வந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

3.உக்கடம் முதல் பொள்ளாச்சி சாலை செல்லும் வாகனங்கள் :
காலை 11.00 மணி முதல் உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லக்கூடிய வாகனங்கள் சுங்கம் – இராமநாதபுரம் – நஞ்சுண்டாபுரம் – போத்தனூர் கடைவீதி – இரயில் கல்யாண மண்டபம் – சாரதா மில் ரோடு – சங்கம் வீதி – தக்காளி மார்க்கெட் வழியாக சென்று பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

  1. உக்கடம் முதல் பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள் :
    காலை 11.00 மணி முதல் உக்கடத்திலிருந்து குனியமுத்துார்
    வழியாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட் வழியாக புட்டுவிக்கி ரோடு வையாபுரி பள்ளி சந்திப்பு கோவைப்புதூர் ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு – குளத்துபாளையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

5.பொள்ளாச்சி முதல் பாலக்காடு ரோடு செல்லும் வாகனங்கள் :
பொள்ளாச்சி சாலையிலிருந்து சுந்தராபுரம் வழியாக பாலக்காடு
ரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் L&T பைபாஸ் சாலை வழியாக மதுக்கரை மார்கெட் – மதுக்கரை மார்கெட் ரோடு – பிள்ளையார்புரம் சந்திப்பு சுகுணாபுரம் வந்து பாலக்காடு சாலையை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

  1. பொள்ளாச்சி முதல் உக்கடம் வரும் வாகனங்கள் :
    பொள்ளச்சி சாலையிலிருந்து சுந்தராபுரம் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்கள் கற்பகம் கல்லூரி சந்திப்பு – ஈச்சனாரி – சுந்தராபுரம் – ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
  2. பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலை வழியாக கோவை வரும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் :
    பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையிலிருந்து கோவை மார்க்கமாக வரும் லாரிகள் மற்றும் சரக்கு கனரக வாகனங்களும் நகருக்குள் அனுமதியில்லை. அவை அனைத்தும் L&T பைபாஸ் சாலையில் தான் செல்லவேண்டும்.

மேலே கண்ட சாலைகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல இருப்பதால் ஊர்வலப் பாதையில் இருக்கும் வியபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதைத் தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Post Views: 34

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks