கோவையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று பரவலானது அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வெளியில் வரும் மக்களுக்கு அபராதம் இருப்பது விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு முயற்சிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தாலும் மக்கள் பலரும் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றி வருகின்றனர்.
இன்று கோவை மேட்டுப்பாளையம் சாலை சங்கனூர் சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அத்தியாவசியத் தேவை இன்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த மக்களுக்கு மாநகராட்சி நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இது வைரஸ் தொற்றை கண்டறியும் புது முயற்சி.

இதனால் பொதுமக்கள் பலரும் தேவையின்றி வெளியில் வராமல் ஊரடங்கை கடைபிடிப்பர் என்று சமூக ஆர்வலர்கள் இம்முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.
Be First to Comment