வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவையில் பல்வேறு பகுதிகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் தி.மு.க, இடதுசாரி ஆகிய கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
Be First to Comment