கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில், கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் சுகாத குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு உள்ள பறவைகள், மான்கள், பாம்புகள், முதலைகள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் நிலை குறித்து வனத்துறை மருத்துவர் செந்தில்நாதனிடம், சுகாதார குழு தலைவர் கேட்டறிந்தார். தொடர்ந்து பல்வேறு ஆலோசனை வழங்கிய சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் பேட்டியின்போது கூறுகையில்;-
தமிழகத்தில் முதல்வர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகின்றது. கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா 1965 ல் துவங்கப்பட்டது. இங்கு பறவைகள், பாம்புகள், குரங்குகள், முதலைகள் உள்ளது. இது கோவையின் அடையாளமாக திகழ்வதாகவும், விலங்குகள் பறவைகளை பார்த்து மாணவ மாணவிகள் மிகவும் பயனடைந்தனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக இந்த உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. சுகாதார குழு சார்பில் இன்று உயிரியல் பூங்காவை ஆய்வு செய்தோம். தற்போது, நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சியில், இப்பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு, இங்குள்ள விலங்குகள், பறவைகள் ஆரோக்கியமாக, சிறப்பாக உள்ளது. மீண்டும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் அனுமதிப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை வைக்கப்படும் என கூறினார்.

இந்த ஆய்வின்போது, சுகாதார குழு உறுப்பினர்கள் சுமா விஜயகுமார், கமலாவதி, ரவி, கல்விக்குழு தலைவர் வசந்தாமணி, அம்சவேணி, அஸ்லாம், சம்பத், உயிரியல் பூங்கா டாக்டர் செந்தில்நாதன், நகர்நல அலுவலர் சதீஷ்குமார், முத்துமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Be First to Comment