குறிச்சி பகுதி தி.மு.க சார்பில் மதுக்கரை ரோட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கிழக்கு மாவட்ட தி.மு.க பொருப்பாளர் மருதமலை சேனாதிபதி தமிழக அரசையும். அமைச்சர் வேலுமணியின் செயல்பாடுகளையும் கடுமையாக எதிர்த்து பேசினார்.

தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளித்து கூட்டத்தில் பேசியதாவது, ”75 நாட்களாக கடும் குளிரில் போராடும் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க கூட மறுக்கும் பிரதமர் தான் நமது நாட்டில் இருக்கிறார். அதை ஆதரிக்கும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். விவசாய சட்டம் சரியென்றும் தமிழகத்திற்கு அது நல்ல சட்டம் என்றும் கூறுகிறார். கோயமுத்தூரை எடுத்துக் கொண்டால் கொரோனா காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். இனி ஆட்சி வரமாட்டோம் என்ற சூழ்நிலையில் வேலுமணி போன்ற அமைச்சர்கள் எல்லோரும் அவர்களுடைய தொகுதிகளில் அவசரவசரமாக பாலங்களுக்கு பூஜை போடுவது, ரோட்டிற்கு பூஜை போடுவதென பணத்தை குறி வைத்து செயலாற்றி வருகின்றனர்.

தி.மு.க சார்பில் குடிநீர் மற்றும் ரோடு பிரச்சனைகளுக்காக ஆர்பாட்டம் நடத்தினால், அந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கிறார்கள். அதையும் மீறி ஆர்பாட்டம் நடத்தினால் காவல்துறையை வைத்து மிரட்டி பார்க்கிறார்கள். இந்த மிரட்டலுக்கெல்லாம் தி.மு.க பயப்படாது. ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர் கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக செயலாற்றுவதான் தி.மு.க. மக்களின் அடிப்படை விசயங்களை கூட தீர்த்து வைக்காத இந்த அரசாங்கம் ஸ்மார்ட் சிட்டி என சொல்லி சும்மா இருந்த குளக்கரையை நிரவி விட்டு பணத்தை சுருட்டுவதற்குதான் அமைச்சர் வேலுமணி இருக்கிறார்.
Be First to Comment