கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜேஜேனட் நிகழ்ச்சியின் துவக்கமாக முதலாம் ஆண்டு மாணவர்களையும், அவர்தம் பெற்றோர்களையும் வரவேற்று கல்லூரியின் சிறப்புகள் மற்றும் சாதனைகள் குறித்து உரையினை வழங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும், நிர்வாக அறங்காவலருமாகிய திருமதி எஸ் மலர்விழி இந்நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

ஒரு வெற்றிகரமான பொறியியல் வல்லுநராக திகழ மாணவர்கள் தங்களின் படிப்பில் முழு ஈடுபாட்டுடன் முழு கவனத்தையும் செலுத்தி, கற்றுக் கொள்ள வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.
மேலும், நல்ல ஒழுக்க நெறிகளை பின்பற்றி பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், தமது கல்லூரி வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும் எனவும் தமது வாழ்த்துறையில் தெரிவித்துக் கொண்டார். பின்னர் பிரபல பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் அனைத்து டீன்களையும், துறை தலைவர்களையும் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்லூரியின் முதல்வர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

தலைமை விருந்தினரின் உரையை தொடர்ந்து கல்லூரியின் கல்வி கையேடு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் உயர் மதிப்பெண் பெற்று நமது கல்லூரியினை தேர்வு செய்த மாணவர்கள், விழா மேடையில் கௌரவிக்கப்பட்டனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களைச் சார்ந்த கல்லூரிகளின் முதல்வர்கள், டீன்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Be First to Comment