Press "Enter" to skip to content

ஸ்ரீ வரசித்தி ஃபாரின் விநாயகர்,ஸ்ரீராமபக்த அனுமன்,மற்றும் அகத்திய மகரிஷி கோவில்களில் சிறப்பு அலங்காரம்,அபிஷேக பூஜை

கோவை வரதராஜபுரம் எல்.ராமசாமி நகர்,கே.ஜி.கார்டன் பகுதியில் அமைந்துள்ளது வரசித்தி விநாயகர் கோவில்.

ஃபாரின் விநாயகர் என அந்த பகுதி மக்களால் அழைக்கப்படும் இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீராம பக்த அனுமன் கோவில்,மற்றும் சமீபத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அகத்திய மகரிஷி திருக்கோவிலில்,கும்பாபிஷேக விழாவும் நடைபெற்றது.

ஸ்ரீ அகத்திய மகரிஷி வழிபாட்டு முறைகள் குறித்து,மேட்டுப்பாளையம்,அகத்தியர் ஞான பீடத்தின் பீடாதிபதி,ஸ்ரீ சரோஜினி மாதாஜி,பக்தர்களுக்கு சிறப்பு விளக்கவுரை அளித்தார்.

தொடர்ந்து,யோகா மற்றும் தியானங்களின் பயன்களும் அவற்றை சரியான முறையில் செய்யும் வழிமுறைகள் குறித்து,யோகா ஆசிரியை விமலா பூபதி விளக்கமளித்தார்.

இதனை தொடர்ந்து,கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்மீகம் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக ஆத்மாவை புனிதபடுத்தும் ஆன்மீக நூல்களை ரோட்டரி கோயமுத்தூர் எலைட் தலைவர் பேராசிரியை சுஜாதா மற்றும் பேராசிரியர் ராஜசேகரன்,ஓய்வு பெற்ற அரசு அலுவலர் தமிழ் செல்வன்,மற்றும் கக்கானி ஆகியோர் இணைந்து வழங்கினர்.

பின்னர் ஸ்ரீ வரசித்தி ஃபாரின் விநாயகர்,ஸ்ரீராமபக்த அனுமன்,மற்றும் அகத்திய மகரிஷி கோவில்களில் சிறப்பு அலங்காரம்,அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

L. ராமசாமி நகர்,Kg கார்டன் நல குழு நிர்வாகிகளால் மிகசிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிதிருந்த இதில், கோவில் நிர்வாக குழுவினர், இறை சேவகி ஆண்டாள், படையல் இயற்கை உணவக உரிமையாளர் படையல் சிவகுமார், கலந்து கொண்டு பக்தர்களுக்கு பல்வேறு சுவை பிரசாத உணவுகளை வழங்கினர்.

திருநெல்வேலி பட்டு சித்தர் எழுதிய அகத்தியர் புத்தகத்தை அவரது சீடர் விமலா பூபதி மூலமாக கோவில் நூலகத்திற்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில்,துணை ஆட்சியர் ப சுரேஷ், முன்னாள் துணை காவல் கண்காணிப்பாளர் பொன். சந்திரசேகர்,கோவில் நிர்வாகிகள் ராதாமணி,ஹரிவரதராஜன்,இறை சேவகி ஆண்டாள்,விஜயகோபால்,இராமமூர்த்தி,சதீஷ்குமார்,கந்தகுமார்,அரங்கராஜு,வி.ராம்மூர்த்தி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks