இன்று சென்னை வரும் பிரதமர் மோடி அதற்கு முன்பாக ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். அங்கிருந்துதான் அவர் சென்னைக்கு வருகிறார்.
ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் பிஸ்னஸ் ஸ்கூல் தொடங்கி 20 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி அந்த கூட்டத்தை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு சென்னைக்கு வருகிறார்.

ஆனால் ஹைதராபாத்தில் பிரதமர் மோடியை வரவேற்க்க தெலுங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவ் செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று கர்நாடகா செல்கிறார். அங்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடாவை கேசிஆர் சந்திக்கிறார். இதை காரணமாக வைத்து பிரதமர் மோடியை அவர் சந்திக்க மறுத்துள்ளார். பொதுவாக மாநிலத்திற்கு வரும் பிரதமரை முதல்வர் சந்திப்பது அல்லது வரவேற்பது புரோட்டோகால் ஆகும்.
கேசிஆர் மோடியை வரவேற்காமல் இருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Be First to Comment