பல்லடத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் ரூபாய் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாயை மோசடி செய்து வாங்கியதோடு, தன்னை பாலியல் ரீதியாக சித்தரவதைபடுத்தி கொலை மிரட்டல் விடுவதாக கோவையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் முதல்வரின் தனிப்பரிவு மற்றும் கோவை மாநகர காவல் துறை ஆணையருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் தாம் ஏமாற்றபட்டுள்ளதால் நீதி கிடைக்க மனு வழங்கியுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னிடம் பல்லடம் சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகனான ஜெயகாந்தன் ,விசைத்தறி தொழிலில் முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என கூறி இரண்டு தவணைகளாக ரூபாய் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பெற்றதாகவும், தொடர்ந்து தமது வீட்டிற்கு வந்த ஜெயகாந்தன் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து தன்னிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதோடு அதனை வீடியோ மற்றும் படங்கள் எடுத்து மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது பணத்தை திரும்ப கேட்ட போது தன்னுடைய ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என அவருடைய நண்பர் நடராஜனுடன் சேர்ந்து மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இது போன்று பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கும் ஜெயகாந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.

1.4 கோடியை ஏமாற்றி பாலியல் சித்திரவதை, கொலை மிரட்டல் : கோவையில் பெண் பரபரப்பு புகார்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment