இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் பரவி வருகின்ற கொரோனா அலையை, கட்டுப்படுத்த மாவட்ட, மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, இதில் ஒரு பகுதியாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, மாநகராட்சி நிர்வாகம், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுகின்ற வாகனங்கள் எக்காரணத்தைக் கொண்டும் இரவு 10 மணிக்கு மேல் பயணிக்கக் கூடாது, இயக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கடுமையாக எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு பிறப்பித்துள்ளது.

இந்த அறிவிப்புகளை காற்றில் பறக்கவிட்டபடி, கோவை ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து சில ஆம்னி பேருந்துகள் இரவு நேரங்களில் இயக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது, மாநகராட்சி அதிகாரிகள் அதனை கண்டு கொள்வதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இருந்து இரவு 10 மணிக்கு மேல், பீகார்,ஒரிசா போன்ற வட மாநிலங்களுக்கு, செல்ல தயாராக இருந்த, ஆம்னி பேருந்துகளில், பயணம் மேற்கொண்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, பீகார், ஒரிசா, ஜார்கண்ட், போன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த, தொழிலாளர்கள், சுமார் 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், ஆம்னி பேருந்து நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர், இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படுகின்ற ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இருந்து ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருக்கின்ற, மாவட்டங்களுக்கு சொல்லவே, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தின், கட்டுபாடுகளை மீறி, இதுபோன்ற சமூக விரோதமான, செயல்கள் மூலமாக, ஆம்னி பேருந்துகளை, இயக்கி வருகின்றனர், மேலும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை மீறி ஒரு பேருந்தில், 70 முதல் 100 வரை பயணிகளை ஏற்றி கொண்டு, சந்தைக்கு ஆடு மாடுகளை அடைத்துச் செல்வதுபோல, வடமாநில தொழிலாளர்களை ஆம்ணி பேருந்து உரிமையாளர்கள், தங்களின் அற்ப லாபத்திற்காக இதனை செய்வதாகவும், தமிழகத்தில் வாழும் வடமாநில தொழிலாளர்கள் தங்களின் தேவைக்காக தேநீர் கூட அருந்தாமல், பணம் சம்பாதித்து வருகின்ற, பயணிகளிடம், 2000 முதல் 3500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக நெஞ்சம் கனத்த நிலையில் கூறுகின்றனர் வடமாநில தொழிலாளர்கள்! சட்ட விரோதமாக இப்படி செயல்படும் இதுபோன்ற, கும்பல்களை மாநகராட்சி அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை தாண்டவே, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்ற மாநகராட்சி நிர்வாகம், நான்கு மாநிலங்களை தாண்டி 100 பயணிகளுடன் கொரோனாவையும் கொண்டு செல்லும், இரவு பேருந்துகளை கண்காணிக்காமல் கோட்டைவிட்டது எப்படி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ :
Be First to Comment