Press "Enter" to skip to content

100 திருக்குறட்களை 4 நிமிடம் 20 நொடிகளில் கூறி பள்ளி மாணவி சாதனை

கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்த லலிதாம்பிகை, ராஜசேகர் தம்பதியினரின் மகள் சிவசங்கரி. ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் இவர், சிலம்பம், பாக்சிங் போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் கலந்து கொண்டு சாதனை படைத்தவர்.

தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட மாணவி சிவசங்கரி, திருக்குறளின் அனைத்து குறட்பாக்களையும் வேகமாக கூறுவதில் தனித்திறமை கொண்டவர், திருக்குறள் உலகம் அகாடமியின் நிறுவனர் திருக்குறள் கணேசணிடம் பயிற்சி பெற்று, திருக்குறளின் பத்து அதிகாரத்தில் உள்ள 100 குறள்களை நான்கு நிமிடம் இருபது நொடிகளில் கூறி நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

வேகமான வார்த்தை உச்சரிப்புடன்,தெளிவாக குறள்களை கூறி சாதனை படைத்த மாணவி சிவசங்கரிக்கு கூடியிருந்த பார்வையாளர்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். சாதனை புரிந்த மாணவிக்கு, நோபள் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரிவித்தார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks