கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை வயது 26. கணவர் பெயர் சிலம்பரசன் இந்த நிலையில் மணிமேகலைக்கு திடீரென வயிற்று வலி வந்தது. இதனை அடுத்து, அவரது கணவர் காரமடை பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்ஸில் மணிமேகலையை ஏற்றி, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வீரபாண்டி பகுதியில் போகும்போது ஆம்புலன்ஸில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மற்றும் பைலட் சங்கர் கணேசன் ஆகியோர் மணிமேகலைக்கு முதல் உதவி செய்துள்ளனர். தற்போது தாய் மற்றும் சேய் வீரபாண்டி புதூர் பகுதியில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.
Be First to Comment