Press "Enter" to skip to content

12ம் வகுப்பு செய்முறை தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தேர்வு நடத்தப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில், செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது, தேர்வு நடக்கும் என்பதை உறுதிசெய்யும் விதமாக அமைந்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக குடிநீர் பாட்டில், கிருமி நாசினி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கிருமி நாசினி பயன்படுத்திய பிறகு எளிதில் தீப்பற்றும் பொருட்களை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட 21 வகையான வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More from தமிழகம்More posts in தமிழகம் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks