12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இயங்காமல் இருந்ததால், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்காக பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, வகுப்பு நடைபெற்று வருகின்றன.
வழக்கமாக மார்ச் மாத துவக்கத்தில் பொதுத்தேர்வு தொடங்கி மார்ச் இறுதி வாரத்தில் முடிவடையும் . கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெறுகின்றன.
காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு பிற்பகல் 1. 15 மணிக்கு முடிவடையும் மாணவர்களுக்கு கேள்வித்தாள்களை படிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.

பொதுத்தேர்வை பொருத்தவரையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவிகிதம் அளவிற்கு பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன எனவே குறைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மட்டுமே பொதுத் தேர்வுக்கான கேள்விகள் இடம் பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆண்டு விடைகளை தேர்ந்தெடுத்து பதிலளிக்கக் கூடிய வகையில் கூடுதலாக கேள்விகள் இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகி தெரிவிக்கின்றன.
தேர்வு அட்டவணை….

Be First to Comment