நாடு முழுவதும் பச்சிளங்குழந்தை முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கடந்த 31-ம் தேதி நடந்தது. இந்த நாளில் சொட்டு மருந்து பெறத் தவறிய குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் அடுத்த சில நாட்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.

இந்தியாவில் நாடு தழுவிய அளவில் ஞாயிறு அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் தவறுதலாக சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி கொடுத்துள்ளனர். 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக தவறுதலாக சுகாதார ஊழியர்கள் சானிடைசர் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிறு கோளாறு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு சானிடைசர் ஊற்றிய ஆஷா பணியாளர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Be First to Comment