மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை ரயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் நிறைவு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த மலை ரயில் 46.61 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது , மலை இரயில் பயணத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகு, இயற்கை காட்சிகள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம்,
இந்த மலை ரெயிலில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே பயணம் செய்யும்போது நீர்வீழ்ச்சிகள், குகைகள், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை காணமுடிகிறது, மலைகளின் இடுக்குகளில் பயணம் செய்யும் இந்த மலை ரயில் சுற்றுலா பயணிகளிடையே மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது, இதில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளங்களுக்கு இடையே பற் சக்கரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது, அதனை பற்றி கொண்டே ரெயில் இயங்குகிறது, நூற்றாண்டைக் கடந்தும் இந்த மலை ரயில் பயணத்திற்கு இன்னும் மவுசு குறையவில்லை, இந்த ரயில் பயணம் உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளது, இந்த மலை இரயில் அவர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது இதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899ம் ஆண்டும் ஜூன் 15ஆம் தேதி முதன் முதலாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மழை ரெயில்ல் இயக்கப்பட்டது, இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, தற்போது கொரோனோ காரணமாக மலை ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது , உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இந்த மழையில் கடந்த 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment