எஸ்.டி.பி.ஐ.கட்சி துவங்கி இன்று 13 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில்,கோவையில் கோட்டை மேடு தலைமை அலுவலகம்,செல்வபுரம், குணியமுத்தூர் உள்ளிட்ட ,100 க்கும் மேற்பட்ட பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் இரத்ததானம் செய்தனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும், மருத்துவ பணியாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதே போல நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக,போத்தனூர், கோவைப்புதூர் அன்பு இல்லம் ஆகிய பகுதிகளில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு போர்வைகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு முககவசம் வழங்குதல் , ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்,உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், எஸ்.டி.பி.ஐ.கட்சியின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் முகமது இசாக், மண்டல செயலாளர் முஸ்தபா, மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம்,தொழிற்சங்க தலைவர் ரவூப் நிஸ்தார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் உசேன், மாவட்ட துணைதலைவர் அன்சர் செரீப்,மாவட்ட செயலாளர்கள் இக்பால்,மற்றும் உமர் செரீப்,செய்தி தொடர்பாளர் மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

13 வது ஆண்டில் எஸ்.டி.பி.ஐ
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment