தமிழகத்தில், கடந்த 70 ஆண்டுகளில் இது வரை இல்லாத அளவுக்கு, பணப்பட்டுவாடா நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், செய்யபட்ட நிலையில், தமிழக தேர்தல் நடைபெற்றுள்ளது, எனவும், அனைவருக்கும் பணம் வாங்கி வாக்குகளை வாங்கிய பின்னர், மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையாது, மகுகளுக்கான அரசாக செயல்படாது, இந்த நிலையில், வர போகின்ற பணத்தால் வாங்கப்பட்ட அரசாக, மட்டுமே செயல்பட உள்ளது.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை எனவும், இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த விதமான பதிலையும் அளிக்க வில்லை எனவும், இதனால், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ததாகவும், இது தொடர்பான வழக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த பொழுது, முறையாக இந்த வழக்கை விசாரணை மேற்கொள்ளாமல், இது, அற்ப காரணமாக, விளம்பரத்திற்காக செய்யபட்ட, வழக்கு, என இதனை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர் எனவும், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை உள்ள காரணமாக இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் விட்டு விட்டனர் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார், இதனை புதிய தமிழகம் கட்சி ஒரு போதும், ஏற்று கொள்ளாது, எனவும், மேல் முறையீடுக்கு புதிய தமிழகம் கட்சி தங்களை தயார் படுத்தி வருகின்றது உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடற இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment