கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு தினமும் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி பல்வேறு சிகிச்சை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து பரவி வரும் நிலையில்,இ.எஸ்.ஐ.வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரம் இலவச முக கவசங்கள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்குவதற்கான முகாம் மருத்துவமனை முன்பாக துவங்கப்பட்டது. கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி.1 மாவட்ட மக்கள் தொடர்பாளர் அரிமா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்ட ஆளுநர் நடராஜன் முகாமை துவக்கி வைத்தார். இதில் நேரு நகர் அரிமா சங்க பொருளாளர் ஹரீஷ்,மற்றும் சூரி நந்தகோபால்,எஸ்.கே.எம்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிங்காநல்லூர் காவல் நிலையம்,கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் அரிமா சங்கம்.

F.O.P.அறக்கட்டளை மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முக கவசங்கள் மற்றும் கபசுர குடிநீர் ,சானிட்டைசர் வழங்க உள்ளதாக முகாம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.துவக்க நிகழ்ச்சியில் ,சிங்கை ரவிச்சந்திரன்,ஜனனி பேக்கரி மோகன்ராஜ்,கிருஷ்ணமூர்த்தி, பாலா,ஜெகந்நாதன், சுந்தர்ராஜ், கிரி,ரவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment