Press "Enter" to skip to content

290 கியூப்களில் பாரதியார் உருவம் வரைந்து 8 வயது குழந்தை அசத்தல்.

கோவை துடியலூர் அருகே அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஹன்சிதா (வயது 8). இவர் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தாய் சுபாஷினி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் 290 கியூப்களில் சுமார் 2மணி நேரம் பாரதியார் உருவம் வரைந்துள்ளார்.
இதுகுறித்து ஹன்சிதா கூறுகையில், ” தமிழக முதல்வர் பாரதியார் நினைவு தினத்தை மகாகவி தினமாக அறிவித்தார். பாரதியாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக 290 கியூப்களில் அவரின் உருவ படத்தை 2 மணி நேரத்தில் வரைந்துள்ளேன்,” என்றார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks