கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக நியூஸ் நாளிதழ் மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து 32 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் பொதுமக்களுக்கு இலவச தலை கவசம் வழங்கும் விழா நடத்தியது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்கள் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஆர்.முத்தரசு, உதவி ஆணையர் வி. சரவணன் ஜேஆர்டி குழுமத் தலைவர் ஜே ராஜேந்திரன் மற்றும் ஜீவன் குழுமம் ரஷீத் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச தலைக் கவசங்களை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினராக தொழிலதிபர் அருண் கலந்து கொண்டார். தமிழக நியூஸ் நாளிதழ் ஆசிரியர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை நிருபர் ரியாஸ், மாவட்ட நிருபர் முருகேசன் சிறப்பு செய்தியாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சி குறித்து தமிழக நியூஸ் ஆசிரியர் ஜெயச்சந்திரன் கூறுகையில், ”32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாயொட்டி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.
தமிழக நியூஸ் சார்பில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு பயன்படக் கூடிய இலவச தலை கவசம் வழங்கும் நிகழ்ச்சி மூன்றாவது முறையாக கோவையில் நடத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இலவச மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் அனைவரது ஒத்துழைப்பின் படி நடைபெறும் என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு செய்தியாளர் செல்வராஜ், தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில பொதுச்செயலாளர் பொன். வல்லரசு, தமிழக நியூஸ் நிருபர்கள் ரவி, சாஜுதீன், கிணத்துக்கடவு அருள்ராஜ், சூலூர் ரஞ்சித், பாலா, பொள்ளாச்சி மோகன், ராமலிங்கம் நகர் விஜி, கராத்தே பிரமேஷ், டிசைனர் ஜோதி, ராமநாதபுரம் ராஜேஷ் மற்றும் சமூக ஆர்வலர் பாசறை ரமேஷ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Be First to Comment