தற்போது கொரோனா மற்றும் பல்வேறு நோய் கிருமிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள முக கவசம் அணிவது கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் சானிட்டைசிங் மூலம் சுத்தப்படுத்துவது போன்று தங்கள் பயன்படுத்தும் கார்களையும் சுத்தமாக வைப்பது அத்தியாவசியமாக உள்ளது.
கொரோனா கால கட்டத்தில் கார்களை சுத்திகரிப்பு செய்வது மற்றும் பராமரிப்பதில் தென்னிந்திய அளவில் அனைவரிடம் வரவேற்பை பெற்றுள்ள 5 கே கார் கேர் தனது 76 வது கிளையை மேட்டுப்பாளையத்தில் துவக்கியது.
மேட்டுப்பாளையம், குட்டையூரில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் 5 கே கார் கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, கார்த்திக்குமார் சின்ராஜ் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக டி.என் 43 ஹோட்டல் குழுமங்களின் நிறுவனர் மொய்து, சக்கரவர்த்தி துகில் மாளிகை பங்குதாரர் ஆறுமுகம், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இராமச்ந்திரன் ஆகியோர் தனித்தனி பிரிவுகளை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
கார்களை பராமரிப்பது மற்றும் புதிய சாதனங்களை காரில் இணைப்பது போன்ற பணிகளில் தனி முத்திரை பதித்து வரும் 5 கே கார் கேர் நிறுவனத்தின் மேட்டுப்பாளையம் கிளை நிர்வாகிகள் பிரேம்குமார், சுந்தர், பாலாஜி ஆகியோர் கூறுகையில், ”கார்களை நவீன முறையில் சானிட்டைசிங் போன்று சுத்தபடுத்துவதாகவும், அனுபவம் வாய்ந்த டெக்னீசியன்களை கொண்டு கார்களின் அழகை கூட்டும் பணியை செய்வதாகவும், இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் வழங்கும் வகையில் 5 கே கார் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக்குமார் சின்ராஜ் கிளைகளை அதிகபடுத்தி வருகிறோம்” என தெரிவித்தனர்.
குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு கார்களை கழுவுவதால்,கொரோனா மட்டுமின்றி அனைத்து வகை நோய் கிருமிகளில் இருந்தும் கார்கள் பாதுகாக்கபடுவதால் வாடிக்கையாளர்கள் பலர் இந்த நிறுவனத்தின் சேவையை விரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

5 கே கார் கேர் நிறுவனத்தில் இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகள்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment