கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த, நவீன்குமார், வித்யாஸ்ரீ இவர்களது 4 வயது மகன் விதுன், இவர் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார்.
கடந்த நான்கு மாதங்களாக அப்பகுதியில் உள்ள சிலம்பம் பயிற்சியாளர் பிரகாஷ் நடத்தி வரும் முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கலை பயிற்சி மையத்தில் சிலம்பகலையை பயின்று வருகின்றார்.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து தமிழக முதலமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார். இதற்கு நன்றி சொல்லும் விதமாக சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மைதானத்தில் அலங்கார இரட்டை சிலம்பத்தை இரண்டு கைகளிலும் சுமார் 5 மணி நேரம் இடைவெளி இல்லாமல் சிறுவன் விதுன் தொடர்ந்து சுற்றி சாதனை படைத்துள்ளார்.
இவரது இந்த சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

Be First to Comment