Category: கோவை செய்திகள்
-
இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ரயில்வே மற்றும் தபால்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில், ரயில்வே வாரியத்தின், நிர்வாக இயக்குனர் சத்தியகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கடந்த பட்ஜெட் அறிவிப்பின்போது ரயில்வே மற்றும் தபால் துறையை இணைத்து புதிய பார்சல் சேவை துவங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.அந்த வகையில் மார்ச் 8ம் தேதி, சூரத் நகரில் இருந்து வாரணாசிக்கு ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து புதிய பார்சல் சேவையை துவங்கியது. இந்த சேவையை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் […]
-
இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில், ஆட்சியர் சமீரன் முன்னிலையில், இக்குழுவின் உறுப்பினர்கள் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் படி ஹோப் காலேஜ் தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டனர். பின்னர் சவரிபாளையம் பிரிவு அத்வைத் நூற்பாலை, உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பொள்ளாச்சி சாலை சிட்கோ, தமிழ்நாடு பஞ்சாலை கழகம்,கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி, காற்றாலை நிலையம், பச்சாபாளையம் சிறுவாணி சாலையில் உள்ள ஆவின், (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நிறுவனம்),புதிய […]
-
விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
மின்சார வரி உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார வரி உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாடங்கள் நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், இன்று மாவட்ட தலை நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவையில் இந்திய தேசிய மாதர் […]
-
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
கோவையில் இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தை கண்டித்து, அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் விவசாயிகளுக்கு இனாமாக கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கான உரிமை பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே இந்து சமய அறநிலையத்துறையினர் இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதனை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் இனாம் விவசாயிகள் இயக்கத்தினர் கோவை பாலசுந்தரம் சாலையில் […]
-
காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
கோவையில் போலீஸ் செல்வராஜ், 19 இஸ்லாமியர்கள் இறந்த தினம் மற்றும் டிசம்பர் 6 போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு, மாநகரத்தின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் கடந்த 1997 ஆம் ஆண்டு, கோவை உக்கடம் பகுதியில் பணியில் இருந்த காவலர் செல்வராஜ் என்பவர், அல் உம்மா எதிரிகளால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் 19 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக,கோவை அரசு மருத்துவமனை எதிரே […]
-
கோவையில் தனியார் மாலில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில், குக்வித் கோமாளி புகழ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்..!
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மக்களுக்காக எப்போது அழைத்தாலும் வருவேன் என தெரிவித்தார். திரையுலகை பொருத்தவரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் 1947 என்ற படத்தில் நடித்து வருவதாகவும், தொடர்ந்து பல்வேறு படங்கள் திரைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். மேலும் வெள்ளித்திரை அனுபவங்கள் குறித்த கேள்விக்கு மக்களுக்கும், மீடியாவிற்கும் தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என பதிலளித்தார். பெரியார் படிப்பகத்தில் திருமணம் செய்து கொண்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். அஜித் உடன் படம் நடித்து விட்டேன் என தெரிவித்த […]
-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற மெகா இரத்ததான முகாமில், பெண்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்…!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு, கோவையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது .உக்கடம் பிலால் நகர் பகுதியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் பள்ளி வாசலில் நடைபெற்ற முகாமில்,கோவை மாநகர் மாவட்ட தலைவர் அஜ்மல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர் காவல் உதவி ஆணையர் ரகுபதிராஜா கலந்துகொண்டு, முகாமை துவக்கி வைத்தார். இதில். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சைஃபுதீன், […]
-
கோவையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..!
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு, பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஜி-20 க்கு தலைமை தாங்க போகிறோம், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு அனுமதி கொடுக்காததற்கு அரசியல் காரணமா என்பதை, இங்குள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும். இந்த சட்டத்தில் என்ன குறைபாடுகளை பார்த்தார் என்பதை அவரிடம் […]
-
உலக மலையாளிகள் பேரவை கோயமுத்தூர் கிளை சார்பாக, ஜோதிர்ஹமயா ஃபேஸ் 2 கண்தான முகாம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது…!
கடந்த 2004 ஆம் ஆண்டு உலக மலையாளிகள் பேரவை சென்னை கிளை சார்பாக, ஜோதிர்ஹமயா எனும் கண் தானம் திட்டம் துவங்கப்பட்டு, இதன் வாயிலாக சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் கண் தானம் செய்ய பதிவு செய்தனர்..லிம்கா உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட ஜோதிர்ஹமயா ஃபேஸ் 2 திட்ட துவக்க விழா கோவையில் நடைபெற்றது… வேர்ல்டு மலையாளி ஃபெடரேஷன் கோவை சாப்டர் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து துவங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், பி.எஸ்.ஜி.மருத்துவமனை மற்றும் நலம் […]
-
கோவை காரமடை குட் ஷெப்பர்ட் தொண்டு நிறுவனம் சார்பாக, பாலின நீதிக்கான சமூகத் தடைகளை நீக்குவது குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது…!
கோவையை அடுத்த, காரமடை குட் ஷெப்பர்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பாலின நீதிக்கான சமூகத் தடைகளை நீக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், கோவை ஜீவன் ஜோதி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற உள்ள இதற்கான துவக்க நிகழ்ச்சியில், .இந்த பயிற்சி முகாமை கோவை மகளிர் திட்ட துணை இயக்குனர் ஜோதி கிருத்திகா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவிற்கு வளர்ச்சி திட்ட பணிகள் ஆலோசகர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். விழாவில் கோவை தந்தை ஜியோ […]