Category: சினிமா
-
திரைப்படமாகிறது முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை..
விரைவில் சினிமாவாக , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கையை எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக முக்கிய பிரபலம் தகவல் வெளியிட்டுள்ளார்.ஸ்டாலின் பயோபிக் எடுக்கும் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலரும் ஒரே சமயத்தில் சினிமாவாக எடுத்தனர். தமிழ் சினிமாவில் பயோபிக் வருகை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க போகிறார்களாம். இந்த […]
-
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆத்திரம்
தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில், இயக்குநரும் பிரபல விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன்,படங்கள் வெளியாகும்போது உடனடியாக விமர்சனங்களை கொடுத்து வருகிறார். அனைவரும் பாசிட்டிவ்வாக சொல்லும் படங்களையும் இவர் விமர்சித்து அந்த ஹீரோக்களின் ரசிகர்களிடம் மாட்டிக கொள்கிறார். இன்றைய தினம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தற்போது பாசிட்டிவ்வான கமெண்ட்களையே வாங்கி வருகிறது. ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அத்தகைய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்ற விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]
-
நயன்தாராவை கைது செய்ய போலீஸில் புகார் | tamilcinemanews
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகின்றனர். ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘சாணிக்காயிதம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம் தற்போது இயக்குநர் அஸ்வின்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ படத்தையும், குஜராத்தில் மொழியில் உருவாகும் ‘சுப் யாத்ரா’ படத்தையும் தயாரித்து வருகிறது. ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ள நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கைது […]
-
குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பு
இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த படம் ”ஆர்டிகள் 15”. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. ஜீ ஸ்டூடியோஸும் போனி கபூரின் பே வியூ பிராஜக்ட்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.ஒரு மனிதனுக்கான எந்தவித அடிப்படை உரிமைகளும் சாதி, மதம், இனம், பால், பிறந்த இடம் இவற்றின் அடிப்படையில் மறுக்கப்படக் கூடாது என்பதுதான் ஆர்ட்டிகள் 15. அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை […]
-
வைரலாகும் ருத்ரன் பட புகைப்படங்கள்
‘காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘லக்ஷ்மி’ படத்தைத் தொடர்ந்து, தமிழில் கவனம் செலுத்தத் தொடங்கினார் லாரன்ஸ். ‘ருத்ரன்’, ‘சந்திரமுகி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதில் எந்தப் படத்தை முதலில் தொடங்குவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. தற்போது, முதலில் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார் லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ருத்ரன். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். […]
-
சன் டிவியில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்?
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.வெளியாகி தற்போது வரை உலகளவில் சுமார் 200 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 100 கோடி வரையும் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று மாஸ்டர் திரைப்படம் சன் டிவியில் மாலை 6.30 […]